சூப்பர்ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

Vijay Sethupathi is the villain for Superstar

'காத்துவாக்குல இரண்டு காதல்' படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி, கமல் நடிப்பில் உருவாகும் 'விக்ரம்' படத்திலும், சீனுராமசாமி இயக்கத்தில் 'மாமனிதன்' படத்திலும் நடித்துள்ளார். இதில் 'விக்ரம்' படம் நாளை (03.06.2022) மற்றும் 'மாமனிதன்' படம் வருகிற ஜூன் 23-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. தொடர்ந்து தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார். இதனிடையே 'விடுதலை', 'மெர்ரி கிறிஸ்துமஸ்', 'காந்தி டாக்ஸ்', ’மும்பைக்கர்’ உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்த வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ் பாபு, 'சர்காரு வாரி பாட்டா' படத்தை தொடர்ந்து த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கில் 2020-ஆம் ஆண்டு வெளியான 'உப்பெனா' படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor vijay sethupathi mahesh babu
இதையும் படியுங்கள்
Subscribe