தனுஷுக்கு வில்லனா விஜய் சேதுபதி? படக்குழு அறிவிப்பு...

வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது தனுஷ் நடித்து வரும் படம் ‘அசுரன்’. மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் உள்ளது. தாணு தயாரித்து வரும் இப்படத்தில் மஞ்சு வாரியர், இயக்குனர் பாலாஜி சக்திவேல், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்டோர் தனுஷுடன் நடித்து வருகின்றனர். இப்படத்தில் தனுஷ் இரு வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

dhanush

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நடிகர் விஜய் சேதுபதி வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவருடைய தேதிகள் ஒத்துவராததால் வடசென்னை படத்தில் நடிக்க முடியவில்லை.

சமீபத்தில் விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தி பரவியது. இந்நிலையில் இதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக படக்குழுவினர் “எப்படி இச்செய்தி வெளியானது என்றே தெரியவில்லை. இதில் உண்மையில்லை. அப்படியொரு பேச்சுவார்த்தை கூட நடைபெறவில்லை” என்று தெரிவித்தனர்.

மேலும் அசுரன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்படம் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அல்லாமல் இப்படம் குறித்து வேறு எந்த தகவல்கள் வந்தாலும் தவிர்த்துவிடுங்கள் என்று படக்குழு அறிவித்துள்ளது.

asuran DHANUSH Vijay Sethupathi
இதையும் படியுங்கள்
Subscribe