/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay sethupathy.jpg)
விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்து வருகிறார், அதில் ஒரு படம்தான் ‘துக்ளக் தர்பார்’.
புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இப்படத்தை இயக்க, ஆர். பார்த்திபன், அதித்திராவ் ஹைதாரி, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை செவன் ஸ்கிரீன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் வியாகாம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர். விஜய் சேதுபதியின் '96' படத்தைத் தொடர்ந்து கோவிந்த் வசந்தாதான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான செவன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் 'துக்ளக் தர்பார்' குறித்து அப்டேட் வெளியிட்டுள்ளது. அதில், இப்படத்தின் ஷூட்டிங் 35 நாட்கள் மட்டுமே முடிவடைந்திருப்பதாகவும் மீதம் 40 நாட்களுக்கு ஷூட்டிங் நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் இதே நிறுவனம்தான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,நயன் தாரா மற்றும் சமந்தாஆகியோருடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 'காத்து வாக்குல இரண்டு காதல்' படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்திற்கான வேலைகள் ஆகஸ்ட் மாதங்களிலிருந்து தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)