Vijay Sethupathi talks about the importance of education

Advertisment

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இது, விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணியில் உருவான மூன்றாவது படமாகும். இப்படத்தின் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவடைந்தும், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து, படத்தின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுள்ளதால் விரைவில் 'மாமனிதன்' படம் வெளியாகும் என இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார். தன் குழந்தைகளின் கல்விக்காக போராடும் ஆட்டோ ட்ரைவர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த ட்ரைலருக்கு சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விரைவில் இப்படத்தின் ரீலீஸ் தேதி அறிவிக்கப்படும்என எதிர்பார்க்கப்படுகிறது.