vijay sethupathi talk about ilaiyaraaja

Advertisment

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இது, விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணியில் உருவான மூன்றாவது படமாகும். இப்படத்தின் பணிகளும்நிறைவடைந்த நிலையில் மே 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் சேதுபதி, யுவன் சங்கர் ராஜா, சீனு ராமசாமி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய விஜய் சேதுபதி, "முதலில் யுவனுக்கு நன்றி. எல்லோருக்கும்இந்த பாக்கியம் கிடைக்குமான்னுதெரியல. இளையராஜாவும் ,யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து பணிபுரியும் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை அமைத்து கொடுத்த யுவனுக்கு நன்றி. நான் ராஜா சாரோட மிகத்தீவிரமான, வெறி தீவிரமான ரசிகன். அவரதுஇசை புரியும் போது அது அறிவில் வளர்ச்சி அடைகிறது. அவ்வளவுஅழகாகவும், துல்லியமாகவும், மண் சார்ந்து இருக்கிறது. இளையராஜா எங்க சொத்து. இதை எப்போ கேட்டாலும் யார் கேட்டாலும் பெருமையாகச்சொல்லுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.