vijay sethupathi starring Kadaisi Vivasayi release date announced

Advertisment

'காக்கா முட்டை'படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதியை வைத்து 'ஆண்டவன் கட்டளை' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் வெற்றி பெற்றதையடுத்து, இரண்டாவது முறையாக 'கடைசி விவசாயி' படத்தின் மூலம் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. விவசாயிகளின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் பேசியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிமனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார். யோகி பாபு, பசுபதி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டே படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டிவருகிறது.

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'கடைசி விவசாயி' படம் பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்திலும், பொன்ராம் இயக்கும் புதிய படத்திலும்நடித்துவருவதுகுறிப்பிடத்தக்கது.