Advertisment

தெலுங்கு ரசிகர்களால் நெகிழ்ந்து நின்ற விஜய் சேதுபதி...

கைதி நம்பர் 150 படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சீரஞ்சீவி நடிக்கும் படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. அவருடைய மகன் ராம் சரண் இப்படத்தை தயாரிக்க சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா, தமன்னா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

vjs

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகிறது. மேலும் மலையாளம், கன்னடம் மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. கொனிடேலா என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிகர் ராம் சரண் தயாரிக்கிறார். படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது.

Advertisment

பல மொழி நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் குவிந்துள்ளதால் இத்திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி இப்படக்குழு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பவன் கல்யாணும் கலந்துகொண்டிருந்தார். இந்த விழாவை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அப்போது விழாவை தொகுத்து வழங்குபவர் விஜய் சேதுபதியை பேசுவதற்கு அழைத்தார். அங்கிருந்த பல தெலுங்கு ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பினார்கள். அதன்பின் தொகுத்து வழங்குபவர் விஜய் சேதுபதியை பார்த்து நீங்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசலாம், நாங்கள் உங்களின் நடிப்பை காதலிக்கிறோம் என்றார். பின்னர், அந்தரிக்கி நமஸ்காரம் என்று தெலுங்கில் கூறிவிட்டு, ஆங்கிலத்தில் பேசிய விஜய் சேதுபதி, சிரஞ்சீவியுடன் நடித்தது எனக்கு மிகவும் கௌரவமாக இருக்கிறது என்று 30 வினாடிகளில் தன்னுடைய உரையை முடித்துவிட்டார்.

இறுதியாக இந்த விழாவில் பேசிய சிரஞ்சீவி, படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அப்போது விஜய் சேதுபதியை பார்த்து. இந்த பிஸியிலும் எனக்காக படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து கொடுத்ததற்கு மிகவும் நன்றி என்றார். ரசிகர்கள் உற்சாகமாக கைதட்டி விஜய்சேதுபதிக்கு ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். அதன்பின் சிரஞ்சீவியின் காலில் விழுந்து மரியாதை செலுத்த வருவார். அவர் ப்ளீஸ் என்றவுடன் எழுந்துகொள்வார் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi chiranjeevi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe