Advertisment

“துரை செந்தில் குமாருடன் நானும் படம் பண்ணுவேன்” - விஜய் சேதுபதி

vijay sethupathi speech in garudan trailer audio launch

Advertisment

வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கருடன்’. இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ட்ரைலர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொள்ள அதில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உல்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேடையில் விஜய் சேதுபதி பேசியதாவது, “மனிதர்களைக் கையால்வதில் செந்தில் குமார் வல்லவர் என வெற்றிமாறன் சொன்னார். செந்திலுடன் சேர்ந்து நானும் கண்டிப்பா படம் பண்ணுவேன். சூரி மாதிரி ஒரு ஆள் சினிமாவில் அறிமுகமாகிஇப்போது இருப்பது பெரிய சாதனை. நானும் சூரியும் சில படங்கள்தான் சேர்ந்து வேலை பார்த்திருக்கோம். ஒரு சீனுக்கு காமெடியை மட்டும் தேடிய மூளை, திடிரென கதையின் நாயகனாக நடிப்பது ரொம்ப கஷ்டம். விடுதலைக்குப் பிறகு கருடன். அடுத்து கொட்டுக்காளி. ஹீரோவாக சூரி வளர இந்தப் படங்கள் அவருக்கு உதவும். சூரிக்கு இயற்கையும் கடவுளும் சேர்ந்து ஆசீர்வதிப்பாங்க. அடுத்த முறை மதுரை மட்டுமல்லாமல் அகில உலக, எனப் போட்டு நிறைய ஊரிலிருந்து பேனர் வரட்டும்” என்றார்.

துரை செந்தில்குமார் சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கி சட்டை தனுஷை வைத்து கொடி, பட்டாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்க கமிட்டாகியுள்ளார்.

actor soori actor vijay sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe