Advertisment

சர்ப்ரைஸ் என்ட்ரி - சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் சேதுபதி

Advertisment

vijay sethupathi in sivakarthikeyan maaveeran movie

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற 14ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. தெலுங்கில் 'மகாவீருடு' என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. அதனால் அதன் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பிசியாக உள்ளனர் படக்குழு.

Advertisment

இப்படத்தில் சிவகார்த்தியேனுக்கு அடிக்கடி வானிலிருந்து ஒரு குரல் கேட்பதாகவும் அதன்படிசிவகார்த்திகேயன் செயல்படுவதாகவும் ட்ரைலரை பார்க்கையில் உணரமுடிகிறது. இந்நிலையில் உருவம் தெரியாத அந்த குரலுக்கு தமிழில் விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளதாக தற்போது படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் 'வீரமே ஜெயம்' என்ற வசனம் விஜய் சேதுபதி குரலில் ஒலிக்கிறது.இந்தவீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

actor sivakarthikeyan actor vijay sethupathi Maaveeran movie
இதையும் படியுங்கள்
Subscribe