96... விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த இந்தத் திரைப்படத்தில் காதல் நிறைந்து வழிந்து ரசிகர்கள் மனதை நனைக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள் படத்தின் மீதான தங்கள் காதலை மீம்சாகவும் ஸ்டேட்டஸாகவும் போட்டு சமூக வலைதளங்களில் '96' மயக்கத்தில் திளைக்கின்றனர். வணிக ரீதியாகவும் இந்தப் படத்துக்கு வெற்றியைக் கொடுத்த ரசிகர்களுக்கும், படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று சென்னையில் நடந்தது. இதில் பேசிய விஜய் சேதுபதி, தன் சிறு வயது காதல் குறித்து பகிர்ந்துகொண்டது...

Advertisment

vijay sethupathi 96 thanks giving

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

"96ஆம் வருஷத்துல நான் ப்ளஸ் 2வோ காலேஜ் ஃபர்ஸ்ட் இயரோ படிச்சுக்கிட்டுருந்தேன். எனக்கும் லவ் இருந்துச்சு. அவங்களுக்கு இப்போ கல்யாணம் ஆகி குழந்தையெல்லாம் இருக்கும். இப்போ அதைப் பற்றியெல்லாம் வெளியே சொல்லுவது தப்புல... " என்று வெட்கப்பட்டவர் தொடர்ந்து, "ஆனா, நான் என் லவ்வை அவுங்ககிட்ட சொன்னதில்லை. ஒன் சைட் லவ்வுதான். எனக்கு ஒவ்வொரு வருஷமும் ஒரு லவ் வரும். நாலாவது படிக்கும்போதே ஆரம்பிச்சுது. ஆனா, ஒரே ஒரு பொண்ணுகிட்ட மட்டும்தான் என் லவ்வை சொன்னேன். அதுதான் என் மனைவி" என்று கலகலப்பாகப் பேசினார்.