Advertisment

நீண்ட நாள் இழுபறியில் இருந்த விஜய் சேதுபதி, சீனு ராமசாமி படம்; படக்குழுவினர் வெளியிட்ட புது அப்டேட்

vijay sethupathi, seenu ramasamy in idam porul yaeval is release soon

Advertisment

'கூடல் நகர்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிதனது இரண்டாவது படத்திலலேயே தேசிய விருது வாங்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் சீனுராமசாமி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'மாமனிதன்' படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. மேலும் பல சர்வேதேச திரைப்பட விருதுகளையும் வாங்கியுள்ளது. அடுத்ததாக 'மெஹந்தி சர்க்கஸ்' ஹீரோ மாதம்பட்டி ரங்கராஜை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே சீனு ராமசாமி இயக்கத்தில் இயக்குநர் லிங்குசாமி தயாரிப்பில் உருவான படம் 'இடம் பொருள் ஏவல்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துநீண்ட ஆண்டுகளாகியும் பல்வேறு காரணங்களால் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘இடம் பொருள் ஏவல்’படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு உத்தரவு பிறப்பித்தது" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் யுவன் சங்கர் ராஜா, வைரமுத்து கூட்டணியில் உருவான முதல் படம் இதுஎனவும் தெரிவித்துள்ளது.

Idam Porul Yeval seenu ramasamy actor vijay sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe