/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/964_1.jpg)
இயக்குநர்லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.மேலும் இப்படத்தின் வசூல் 300 கோடியைத்தாண்டியுள்ளது. இனி வரும் காலங்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கப்படும் எனத்தெரிகிறது.
இதனிடையேநடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்காக லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ்கார்ஒன்றையும், படத்தில் உதவி இயக்குநராகபணியாற்றிய 13 பேருக்குடிவிஎஸ்அப்பாச்சிRTR 160பைக்கைபரிசாக அளித்தார்.அத்துடன்விக்ரம் படத்தில்சிறப்புத்தோற்றத்தில் நடித்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கடிகாரத்தைப்பரிசாக அளித்தார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்தமாமனிதன் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் விஜய் சேதுபதியிடம்நிருபர் ஒருவர், விக்ரம் படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கமல்ஹாசன்லோகேஷுக்குகார்,சூர்யாவுக்குகடிகாரம் கொடுத்தார்.அதே போன்று விக்ரம் படத்தில் சந்தனமாகநடித்த உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அது கிடைத்த பெரும் பாக்கியம். இதை நான் வாழ்நாளில் கற்பனை கூட பண்ணிப் பார்த்திராத விஷயம்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)