Advertisment

வருமான வரித்துறையிடம் விஜய் சேதுபதி கோரிக்கை

vijay sethupathi request in income tax department function

மதுரையில் வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் மைய தொடக்க விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், “நான் படிப்பை முடித்துவிட்டு சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆடிட்டரிடம் அசிஸ்டண்டாக ஆறுமாதம் வேலை பார்த்தேன். அப்போது அரசு தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்வது சிரமமாக இருக்கும். ஆனால் தற்போது எளிதாக, புரிகிற அளவுக்கு இணையதளம் ஆரம்பித்து, பான் கார்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் அதில் இருக்கும் சிக்கல்கள் என்ன என்பதை வருமான வரித்துறை கார்ட்டூன் வடிவில் கொண்டு வந்திருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.

Advertisment

நான் பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டுமானால், அது ஆங்கிலத்திலும், இந்தியில் மட்டும்தான் இருக்கிறது. நிறைய பேருக்கு அது புரிய கடினமாக இருக்கும். அது தமிழில் இருந்தால் எளிமையாக புரியும். பொதுவாக ஒரு பிரச்சனை வந்தால் தான் அதைப் பற்றி தெரிந்து கொள்கிறோம். மற்றபடி இந்த முயற்சி அற்புதமானது. வரி செலுத்துவது முக்கியமும் அவசியமுமானது. எந்தளவு நமது உரிமைக்காக அரசிடம் கோரிக்கை வைக்கிறோமோ, அந்தளவுக்கு வரி செலுத்துவதும் அவசியம். அது நமது கடமை என நம்புகிறேன். ரொம்ப நாளாக என் மனதில் ஒரு கோரிக்கை இருக்கிறது. ஒரு காலத்தில் நாம் கஷ்டப்பட்டு நன்றாக சம்பாதிக்கும் போது நல்ல வரி செலுத்தியிருப்போம். ஆனால் ஒரு கட்டத்தில் செலுத்த முடியாத நிலை வந்தால், நல்ல முறையில் வரி செலுத்திய குடிமகன்களுக்கு ஏதாவது சலுகைகள் வழங்கினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

Advertisment

விஜய் சேதுபதி கடைசியாக விடுதலை பாகம் 2 படத்தில் நடித்திருந்தார். மேலும் ஏஸ், ட்ரெயின், காந்தி டாக்ஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.விஜய் சேதுபதி கடைசியாக விடுதலை பாகம் 2 படத்தில் நடித்திருந்தார். மேலும் ஏஸ், ட்ரெயின், காந்தி டாக்ஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் மதுரை வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு ஏழைகளுக்கு வரியை கொஞ்சம் பார்த்து போடுமாறு கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

INCOME TAX DEPARTMENT actor vijay sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe