cbbb

Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன், புகழ் மகேந்திரன் 'வாய்தா' படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகிறார். முற்றிலும் புதுமுகங்களின்கூட்டணியில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மகிவர்மன் சி.எஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் ‘ஜோக்கர்’, ‘கே.டி. என்கிற கருப்பத்துரை’ படம் மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், ‘நக்கலைட்ஸ்’ புகழ் பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

 gjgjg

வராஹா சுவாமி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கே.வினோத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, அறிமுக இசையமைப்பாளர் சி.லோகேஷ்வரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி நேற்று (28.01.2021) வெளியிட்டுள்ளார். போஸ்டரில் கழுதையுடன் மு.ராமசாமி கோர்ட் கூண்டுக்குள் இருப்பது போன்ற காட்சியும், சாமானியர்கள் மேல் நடத்தப்படும் வன்முறை என்ற வாசகமும் கவனம் ஈர்த்துள்ளது. மோஷன் போஸ்டரின் இறுதியில் சட்டம் குறித்து நாசர் பேசும் வசனம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ‘வாய்தா’ திரைப்படம் இதுவரை 20க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.