க்ரைம் த்ரில்லர்... அஜினோமோட்டோ போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

vijay sethupathi released Ajinomoto First Look

அறிமுக இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில், ஆர்.எஸ் கார்த்திநடிப்பில் உருவாகியுள்ள படம் அஜினோமோட்டோ'. இப்படத்தில் கதாநாயகியாக காயத்திரிரேமாநடிக்க, டி. எம். உதயகுமார் இசையமைத்திருக்கிறார். க்ரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த படத்தை தத்தாத்ரே ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் சிவராஜ் பன்னீர்செல்வம் மற்றும் ஆ. தமிழ் செல்வன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைநடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

இந்நிலையில் படம் குறித்து பேசிய இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள், "'அஜினோமோட்டோ' என்பது சுவையை அதிகரிக்கக்கூடியது. ஆனால் அது மனிதர்களை மெதுவாக கொல்லும் விஷம். இதனை மையப்படுத்தி ‘அஜினோமோட்டோ’ படத்தின் கதை தயாராகியிருக்கிறது. கதையில் நடைபெறும் சில சம்பவங்கள், கதாபாத்திரங்களுக்கு, அந்த சமயத்தில் நல்லதாகத் தோன்றும். ஆனால் பிறகு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதன் பின் விளைவுகளும் கடுமையாக இருக்கும். அது என்ன? என்பதை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி இருப்பதே இப்படத்தின் திரைக்கதை. மேலும் இது போன்ற அனுபவங்களை, கழுகு கண் பார்வையுடனான திரைக்கதையாக விவரிக்கும் போது, பார்வையாளர்களுக்கு புது வகையான அனுபவம் கிடைக்கும்'' என்றார்.

actor vijay sethupathi
இதையும் படியுங்கள்
Subscribe