‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட பல படங்களில் நடித்து பிரபலமான விமல் கடைசியாக விலங்கு என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த தொடர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது.
இந்நிலையில் விமல் அடுத்தாகநடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெய்வ மச்சான் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர்மார்ட்டின் நிர்மல் குமார் இயக்குகிறார். உதய புரொடக்சனுடன் இணைந்து மேஜிக் டச் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பால சரவணன் நடிக்கிறார். 'தெய்வ மச்சான்'படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைவெளியிட்டுள்ளார். கலர் ஃபுல்லாகவெளியாகியுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.