vijay sethupathi plays negative role karthi next movie

Advertisment

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் 'பொன்னியின் செல்வன்' மற்றும் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் 'விருமன்' ஆகிய படங்களில்நடித்து முடித்துள்ள கார்த்தி தற்போது இயக்குநர்மித்ரன் இயக்கும் 'சர்தார்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜு முருகன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய் சேதுபதி கதைக்கு தேவைப்பட்டால் வில்லன் கதாபாத்திரத்திலும்நடித்து வருகிறார். அந்த வகையில் 'பேட்ட' படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாகவும், 'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு வில்லனாகவும்நடித்துபலரையும் ஆச்சர்யப்படுத்திருந்தார்.இதையடுத்துநடிகர் விஜய் சேதுபதி, கார்த்திக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர்விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காதுவாக்குலரெண்டு காதல்' படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தில் கமலுடன் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.