/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/35_14.jpg)
போயபதி சீனு இயக்கத்தில் உருவாகி வரும் 'அகண்டா' படத்தில் கவனம் செலுத்தி வரும் பாலகிருஷ்ணா, அடுத்ததாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ளார். பாலகிருஷ்ணாவின் 107ஆவது படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இப்படத்திற்கான ஆரம்பக்கட்டப்பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்கவைக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழு விஜய் சேதுபதியை அணுகியபோது அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த தெலுங்குப் படமான 'உப்பெனா' திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)