கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் தெருக்கூத்து கலைஞன் காலண்டர்!

vijay sethupathi photo Calendar2022 goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி தனது எதார்த்த நடிப்பாலும், வசீகர பேச்சாலும் பெரும் ரசிகர்கள் கூட்டத்தையேதன் பக்கம் திருப்பியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி, கதாநாயகன், வில்லன், கவுரவ தோற்றம் என கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் சிக்சர் அடித்துள்ளார். தமிழ் மொழியைத் தாண்டி மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிபடங்களிலும் நடித்துவருகிறார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="cf83746a-b7aa-401a-9b17-b0aa7504a240" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/velan-article-inside_33.jpg" />

இதனிடையே நடிகர் விஜய் சேதுபதி நலிவடைந்து வரும் தெருக்கூத்து கலைஞரின் வாழ்க்கையைமேம்படுத்த புகழ் பெற்ற புகைப்பட கலைஞர் எல். ராமச்சந்திரனுடன் இணைந்து தெருக்கூத்து கலைஞன் என்ற பெயரில் 2022 ஆம் ஆண்டிற்கான காலண்டரைவெளியிட்டுள்ளார். இந்த காலண்டரில் விதவிதமான தெருக்கூத்து கலைஞர்களின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி தோன்றியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor vijay sethupathi
இதையும் படியுங்கள்
Subscribe