vijay sethupathi

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, தமிழ் மட்டுமல்லாது பிற மொழிப்படங்களிலும் நடித்துவருகிறார். சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்த 'உப்பெனா' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் சில இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார்.

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாநகரம்' படத்தின் இந்தி ரீமேக்கை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில், விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், பிரபல இந்தி நடிகை கத்ரீனா கைஃபுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தை 'அந்தாதூன்' படத்தை இயக்கி பிரபலமடைந்த ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார்.

Advertisment

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘மேரி கிறிஸ்துமஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. புனேவைக் கதைக்களமாகக் கொண்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் மாதத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.