விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் ஆறுமுக குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார். அந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Advertisment

vijay sethupathi

`லாபம்' என்று இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு விறுசிறுப்பாக நடைபெற்று வருகிறது. லாபம் படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்காக புதிய கெட்டப்பபில் விஜய் சேதுபதி நடித்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அடர்ந்த முடி, அடர்ந்த தாடியுடன் விஜய் சேதுபதியின் இந்த கெட்டப் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment