niharika

விஜய் சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்'. இந்தப் படத்தில் கௌதமிற்கு ஜோடியாக நிஹரிகா கொனிடேலா நடித்திருந்தார்.

Advertisment

நிஹரிகா, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபுவின் மகள் ஆவார். இவர் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், அவர் பகிர்ந்த புகைப்படத்தில் மாப்பிள்ளையின் முகம் தெரியாதவாரு பகிர்ந்து தனது ரசிகர்களைக் கண்டுபிடிக்கச் சொன்னார்.

Advertisment

இந்நிலையில் இன்று காலை இன்ஸ்டாகிராமில், சைதன்யா என்பவருடன் இருக்கும் ஃபோட்டோ பகிர்ந்து என்னுடையவர் என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்தப் பதிவிற்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

நிஹாரிகா திருமணம் செய்து கொள்ளவிருக்கும் சைதன்யாடெக் மஹிந்திராவில் பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் வருகிற ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த வருட இறுதியில் இவர்களது திருமணம் நடைபெறவிருக்கிறதாம்.

Advertisment