Advertisment

தேசிய விருதுடன் இயக்குநரை சந்தித்த விஜய் சேதுபதி!

vijay sethupathi meet director thiyagarajan kumararaja

டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விழாவில், 2019ஆம் ஆண்டு சினிமா துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில், சிறந்த துணை நடிகருக்கான விருது, 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. மேலும் தனுஷ், பார்த்திபன், டி. இமான், வெற்றி மாறன், நாகா விஷால் ஆகியோருக்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

Advertisment

இதனைத் தொடர்ந்து, சென்னை வந்த கையோடு நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவைநேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இது தொடர்பானவீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார். அதில், தேசிய விருது கடிதத்தை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா படிக்கிறார். பின்னர் இயக்குநர்கைகளால் நடிகர் விஜய் சேதுபதிக்கு விருது அணிவிக்கப்படுகிறது. அதனையடுத்து 'எனது படத்தின் மூலம் விஜய் சேதுபதிக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சி' என இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தெரிவித்துள்ளார். பின்னர் படக்குழுவினர் அனைவரும் நடிகர் விஜய் சேதுபதிக்கு நன்றி கூறுகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisment

actor vijay sethupathi super deluxe
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe