‘லட்சுமி திருடு போச்சு’ - மகாராஜாவாக விஜய் சேதுபதி

vijay sethupathi maharaja trailer released

விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2, மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா, ஆறுமுகக் குமார் இயக்கத்தில் ‘ஏஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடரில் நடித்து வந்தார். அது தற்போது கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் மகாராஜா படம் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். இவர்களோடு நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்திற்கு அஜ்னீஸ் லோக்நாத் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் 2024-இன் ‘இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் லாஸ் ஏஞ்சல்ஸ்’ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இந்த விழா ஜூன் 27 முதல் ஜூன் 30 வரை மொத்தம் மூன்று நாட்கள் நடக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மகாராஜா என்ற கதாபாத்திரத்தில் சலூன் கடை வைத்திருக்கும் விஜய் சேதுபதி லட்சுமி காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அந்த லட்சுமி அவரது மனைவியோ, பிள்ளைகளோ, பணமோ, தங்கமோ இல்லை எனவும் போலீஸின் கேள்விக்கு பதிலளிக்கிறார். இதனால் இதையடுத்து அந்த லட்சுமி என்பது யார், அது எப்போது தொலைந்து போனது, எதற்காக தொலைந்து போனது, இறுதியில் அதைக் கண்டுபிடித்தார்களா என்பதை சஸ்பன்ஸ் கலந்த த்ரில்லருடன் சொல்லியிருப்பது போல் தெரிகிறது. இப்படம் விரைவில் வெளியாகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மிக விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor vijay sethupathi Maharaja
இதையும் படியுங்கள்
Subscribe