Advertisment

விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கு - தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

vijay sethupathi maha gandhi case update

கடந்த 2021 ஆம் ஆண்டு பெங்களூரு விமான நிலையத்தில், விஜய் சேதுபதி தன்னை தாக்கியதாகக் கூறி மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், மைசூருக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக விஜய் சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்துப் பேசி வாழ்த்தியதாகவும் அதை விஜய் சேதுபதி ஏற்க மறுத்து சாதியைக் குறிப்பிட்டுத் தவறாகப் பேசியதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன்னை விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன் தாக்கியதாகவும் அவர்கள் இருவரையும் குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமாறும் கேட்டுக்கொண்டார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவ்விவகாரம் குறித்து விஜய் சேதுபதிக்கு சம்மன் அனுப்பியது. இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி விஜய் சேதுபதி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், உரிய ஆதாரம் இல்லாமல் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் விஜய் சேதுபதியிடம் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியது செல்லாது எனக் கூறி விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

Advertisment

இதையடுத்து விஜய் சேதுபதி தரப்பில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மகா காந்தி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சமரசமாகப் பேசித்தீர்வு காணலாம் எனவும், இருவரும் சமாதானமாகச் செல்வதாக இருந்தால் அதற்கான ஏற்பாடு செய்யப்படும் எனவும் நீதிபதி கூறினார். இதையடுத்து இருதரப்பும் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அது தோல்வியில் முடிவடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மேல்முறையீட்டு மனுதொடர்பாக உச்சநீதிமன்றம், பரஸ்பரம் பேச்சுவாத்தை தோற்றதால் கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. எந்த விவகாரமாக இருந்தாலும் விசாரணை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி, விஜய் சேதுபதி தன் மீதான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

Supreme Court actor vijay sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe