நீண்ட இழுபறிக்கு பிறகு வெளியான விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி

vijay sethupathi MAMANITHAN movie release may20

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இது, விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணியில் உருவான மூன்றாவது படமாகும். இப்படத்தின் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவடைந்தும், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது.இதையடுத்து, படத்தின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுள்ளதால் விரைவில்'மாமனிதன்' படம் வெளியாகும் என இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'மாமனிதன்' திரைப்படம் மே 20 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நடிகர் ஆர்.கே சுரேஷின் ஸ்டுடியோ 9நிறுவனம் வெளியிடவுள்ளது. சமீபத்தில் வெளியான 'மாமனிதன்' படத்தின் பாடல் மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

actor vijay sethupathi maamanithan seenu ramasamy
இதையும் படியுங்கள்
Subscribe