style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விஜய் சேதுபதி நடிப்பில் '96' படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை தொடர்ந்து அவரின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்துக்கொண்டிருக்கும் 'சயீரா நரசிம்ம ரெட்டி' தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி சுதீப்புடன் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நயன்தாரா, சுதீப் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.