மகாராஜா பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2, மிஷ்கினின் ட்ரெயின் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. மேலும் காந்தி டாக்ஸ் என்ற மௌனப் படத்தைக் கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி காமெடி நடிகர் தெனாலியின் குடும்பத்தினருக்கு உதவியுள்ளார். மறைந்த நடிகர் விவேக்குடன் நிறைய காமெடி காட்சிகளில் நடித்து வந்தவர் தெனாலி. ஆனால் விவேக் இறந்து பட வாய்ப்புகள் குறைந்து தற்போது வாழ்வாதாரத்திற்குச் சிரமப்பட்டு வருகிறார்.
இதை அறிந்த விஜய் சேதுபதி தற்போது தெனாலியின் மகன் கல்லூரி படிப்பிற்கு ரூ.75 ஆயிரம் வழங்கியுள்ளார். மேலும் தெனாலி குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். விஜய் சேதுபதியின் இந்த செயலுக்கு தற்போது இணையத்தில் பாராட்டை பெற்று வருகிறது.