ஒரு லட்சம் பேருக்கு வேலை... ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi has created employment 1lakhs people

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களைகவர்ந்துள்ளார். தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி ஏழை எளிய மக்களுக்கு சமூக நலத்திட்டங்களை செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2019 ஆண்டு முதல் சமுதாயத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக வள்ளலார்வேலை வாய்ப்பு சேவை இயக்கம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் இந்த நிறுவனத்தில் ஊழியர்களைஅமைத்து அவர்களுக்கானஊதியத்தையும் கொடுத்து வருகிறார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கட்டணமில்லாமல் வேலை தேடும் இளைஞர்கள், வேலையளிக்கும் நிறுவனங்களிடம்இருந்து தொடர்ந்து அழைப்பு வருவதாக கூறப்படுகிறது.இத்திட்டத்தின் மூலம் இதுவரை 1 லட்சத்து 133 பேர் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து உள்ளார்கள்.மேலும் இதன் மூலம் 73 சுய தொழில் முனைவோர்களையும்உருவாக்கியுள்ளதாக விஜய் சேதுபதி தரப்பினர் கூறியுள்ளனர். சத்தமில்லாமல் விஜய் சேதுபதி செய்து வரும் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

actor vijay sethupathi
இதையும் படியுங்கள்
Subscribe