Advertisment

மவுன படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி! 

vgsdgdz

விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படம் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் விஜய் சேதுபதி தற்போது துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட படங்களிலும் தற்போது நடித்து வரும் நிலையில் விஜய் சேதுபதி அடுத்தாக ஹிந்தியில் உருவாகும் மவுனப் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கவுள்ள இப்படத்திற்கு 'காந்தி டாக்ஸ்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கமல் நடிப்பில் 1987-ம் ஆண்டு வெளியான 'பேசும் படம்' மவுன படத்திற்கு பிறகு 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு மவுன உருவாகவுள்ளது. மேலும் மூவி மில் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் குறித்து இயக்குனர் கிஷோர் கூறும்போது...

Advertisment

"இந்தப் படம் உணர்ச்சிரீதியாக என் இதயத்துக்கு நெருக்கமான படம். ஒரு நடிகரும் அந்த யோசனை மற்றும் அதே உணர்ச்சிகளோடு தன்னைத் தொடர்புப்படுத்திக் கொள்ளும்போது அது இயக்குநருக்குக் கிடைக்கும் வரம். எனக்கு விஜய் சேதுபதி அப்படி ஒரு நடிகர்தான். தனது நடிப்பின் மூலம் சவாலான ஒரு கதைக்கு உரிய நடிப்பைத் தரக்கூடியவர். அவர் இந்தத் திரைக்கதையைப் படித்தவுடனேயே, படம் குறித்த எனது பார்வையை, அணுகுமுறையை முழுவதுமாகப் புரிந்துகொண்டார். ஒவ்வொரு இயக்குநரும் தங்கள் நடிகர்களிடமிருந்து குறிப்பிட்ட சில குணாதிசயங்களை எதிர்பார்க்கிறார்கள். இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க பாலிவுட்டில் நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் மற்ற மொழித் திரைத்துறைகளிலும் தேடினேன். அப்போதுதான் விஜய் சேதுபதி பற்றித் தெரியவந்தது. அவரது நடிப்புத் திறன், ஸ்டைல், குரலில் இருக்கும் ஆற்றல் எல்லாம் வியக்கவைத்தது. அவரைப் பார்த்தவுடன்தான் என் கதையின் நாயகன் கிடைத்துவிட்டான் என்பதை உணர்ந்தேன். அவர், அவரது தொழிலில் அற்புதத் திறமையாளர் என்பது மட்டுமல்ல, மிகவும் எளிமையான, பிரச்சாரம் செய்யாத ஒரு நட்சத்திரம். தனது படங்களுக்காக எந்தவிதமான எல்லைக்கும் செல்லக் கூடியவர். அவரோடு பணியாற்றுவதில், எனது கனவுப் படத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிப்பதில் உற்சாகமாக இருக்கிறேன்" என்றார்.

Advertisment

Gandhi Talkies Vijay Sethupathi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe