Advertisment

வலுக்கும் மக்களின் எதிர்ப்பு... நடிப்பாரா விலகுவாரா சிக்கலில் விஜய்சேதுபதி...

பாலிவுட்டில் வருடா வருடம் நிறைய பயோபிக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக கிரிக்கெட் வீரர்களுக்கான பையோபிக்களும் எடுத்து வரப்படுகிறது. தோனி, சச்சின், அசாருதின், தற்போது கபில் தேவ் என்று பயோபிக்கள் நீண்டு கொண்டே இருக்கிறது.

Advertisment

vijay sethupathi

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தர்மோசர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. தன் பயோபிக் உருவாகவுள்ளது தொடர்பாக முத்தையா முரளிதரன், “விஜய் சேதுபதி போன்ற ஒரு திறமையான நடிகர் என் கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு பெருமை” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்த படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி கூறும்போது, “உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் முத்திரை பதித்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது. இந்த கதாபாத்திரம் எனக்கு சவாலாக இருக்கும்” என்றார்.

ஆனால், பலர் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று சமூக வலைதளத்தில் எதிர்த்தனர். விடுதலை சிறுத்தை கட்சி இதை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் பல ஈழத் தமிழர்களும் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது என்று எதிர்ப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனாலும், படத்திலிருந்து விஜய் சேதுபதி நடிப்பதில் உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில் கொழும்புவில் நேற்று கொத்தபாய ராஜபக்ச ஏற்படுத்திய வியத்மக என்ற அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய முரளிதரன், "தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அப்பாவி மக்களை படுகொலை செய்தனர். விடுதலை புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட அன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

இனி இந்த நாட்டில் அமைதியாக வாழ முடியும் என்று எனக்கு தோன்றியது அன்றுதான். இலங்கையைப் பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல்வாதிதான் அடுத்ததாக அதிபராக ஆட்சிக்கு வர வேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்கு அனுபவம் உள்ள ஒருவரால்தான் தீர்வு காணவும் முடியும்" என தெரிவித்தார்.

முரளிதரன் இப்படி பேசியுள்ளதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து முரளிதரன், நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் அவ்வாறு பேசவில்லை என்று இதுகுறித்து கூறியுள்ளார்.முரளிதரன் இப்படி பேசியுள்ளதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து முரளிதரன், நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் அவ்வாறு பேசவில்லை என்று இதுகுறித்து கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி இவர் கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருக்கிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வலுக்கும் எதிர்ப்புகளை மீறியும் நடிப்பாரா இல்லை விலகுவாரா விஜய் சேதுபதி .

muthaiya muralidharan Vijay Sethupathi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe