கடந்த 1994ஆம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் நடிப்பில் வெளியான படம் ‘பாரஸ்ட் கம்ப்’. ஹாலிவுட் கிளாஸிக் படங்களில் தவிர்க்க முடியாத ஒரு படமாக இது இருக்கிறது. இந்த படம் ஆறு ஆஸ்கர்கள் வாங்கியுள்ளது.

Advertisment

vijay sethupathi

தற்போது இந்த படத்தை ரீமேக் செய்யும் உரிமையை வாங்கியுள்ள அமீர்கான் பாலிவுட்டில் லால் சிங் சட்டா என்று எடுத்து வருகிறார். சீக்ரெடி சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இப்படத்தை இயக்குகிறார்.

பாரஸ்ட் கம்ப் படத்தில் கம்ப் கதாபாத்திரம் இராணுவத்தில் பணிபுரிவார் அப்போது அவருடைய நண்பர் பப்பா என்று ஒருவர் இருப்பார். அதுபோன்ற கதாபாத்திரம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தெரிகிறது.

Advertisment

ஃபாரஸ்ட் கம்ப் உரிமையை வாங்கியுள்ள அமீர்கான், அதை இந்தியாவிற்கு ஏற்ற சூழலில் மாற்றிய அமைக்க அடுல் குல்கர்னி வைத்து எழுத வைக்கிறார்.

மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கான் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி நடித்த கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்க உள்ளார்.