ADVERTISEMENT

ஐபோன் வாங்கித்தந்த விஜய் சேதுபதி...

02:43 PM Sep 04, 2018 | kamalkumar

ADVERTISEMENT

'மேற்குத் தொடர்ச்சி மலை' வெளியாகி வணிகரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. இப்படத்தின் கதாநாயகனாக நடித்த ஆன்டனிக்கு படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதி ஐஃபோன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு கதைநாயகன் ஆண்டனியை அழைத்த ஒரு செய்தியாளர், வாட்ஸ்-அப்பில் புகைப்படம் அனுப்புமாறு கேட்டுள்ளார். அதற்கு, "அண்ணே என்கிட்டே ஸ்மார்ட் ஃபோன் இல்லைண்ணே" என்று ஆண்டனி கூற அதிர்ச்சியடைந்தார் அந்த செய்தியாளர். இந்த விஷயம் எப்படியோ விஜய் சேதுபதிக்குப் போக, உடனே ஆண்டனியை அலுவலகத்துக்கு அழைத்த அவர், தன் உதவியாளர்களிடம் கூறி ஆண்டனிக்கு இந்த ஐஃபோனை பரிசளித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு பயிற்சிக்காக படக்குழுவினர் தேனியில் வீடு எடுத்து தங்கியதிலிருந்தே மாத ஊதியமாக சிறு தொகையை விஜய் சேதுபதி அளித்தாராம். அவர் குறித்துப் பேசும்போது 'அண்ணன், அண்ணன்' என்று அன்பாய் கூறுகிறார் ஆண்டனி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT