Advertisment

மணிகண்டனுடன் மீண்டும் கூட்டணி - முதல் முறையாக தமிழ் வெப் சீரிஸில் நடிக்கும் விஜய் சேதுபதி

vijay sethupathi first tamil web series under manikandan direction

'காக்கா முட்டை' படம் மூலம் இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமான மணிகண்டன், குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை என யதார்த்தமான படங்களை இயக்கி பிரபலமானார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'கடைசி விவசாயி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதோடு திரை விமர்சகர்களாலும் பெரிதாகப் பாராட்டப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து மணிகண்டன் ஒரு படம் இயக்க உள்ளதாக முன்பு தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் மணிகண்டன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் ஒரு வெப் சீரிஸிற்காக இணைந்துள்ளனர். இத்தொடர் மூலம் முதல் முறையாக தமிழ் வெப் சீரிஸில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்த தொடரை விஜய் சேதுபதியை வைத்து 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை இயக்கிய ஆறுமுக குமார் தயாரிக்கிறார். இவர் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். ராஜேஷ் முருகேசன் இசையமைக்கும் இந்த தொடரின் படப்பிடிப்பு மதுரை அருகே உசிலம்பட்டியில் பூஜையுடன் தொடக்கி நடைபெற்று வருகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இத்தொடர் வெளியாகவுள்ளது.

Advertisment

முன்னதாக இந்த தொடரில் மலையாள நடிகர் மம்மூட்டி நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியானது. ஆனால் அது போல் படக்குழு எதுவும் குறிப்பிடவில்லை. விரைவில் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய் சேதுபதி இந்தியில் ஜவான், மும்பைக்கார், மெர்ரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்கள் மற்றும் காந்தி டாக்ஸ் என்ற தலைப்பில் ஒரு மவுன படத்தில் நடிக்கிறார். நேற்று (31.03.2023) இவர் நடிப்பில் வெளியான 'விடுதலை பாகம் 1' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

actor vijay sethupathi manikandan web series
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe