
தென்னிந்திய மொழிகளைத் தாண்டி பாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அந்த வகையில் தமிழில் 'விடுதலை' தெலுங்கில் 'மைக்கேல்' இந்தியில் 'ஜவான்', 'மும்பைக்கார்', 'மெர்ரி கிறிஸ்துமஸ்' உள்ளிட்ட படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் இந்தியில் ராஜ் மற்றும் டீகே புதிதாக எடுத்து வரும் ‘ஃபார்ஸி’ தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஷாஹித் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தத் தொடர் அடுத்த மாதம் 10ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. இந்தப் போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னதாக ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘ஃபேமிலி மேன்’ சீரிஸில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் சில சர்ச்சைகளைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.