/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/150_20.jpg)
விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை' படத்தில் நடிக்கிறார். மேலும் முதன்மைக் கதாபாத்திரம், முக்கியக் கதாபாத்திரம், வில்லனாக எனப் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இந்தியில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்திலும், ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும், 'மும்பைகார்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் 46வது படத்தை இயக்குநர் பொன் ராம் இயக்குகிறார். 'டிஎஸ்பி' எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் அனுக்ரீத்தி வாஸ், பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் வழங்க கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்கிறார். இசைப் பணிகளை இமான் மேற்கொள்கிறார். அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் 'டிஎஸ்பி' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'நல்லா இரும்மா' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலைப் பார்க்கையில் கல்யாணம்நடக்கும் மண்டபத்தில், மணமக்களை வாழ்த்தி விஜய் சேதுபதி பாடுவது போல் காட்சி அமைந்துள்ளது. மேலும் இப்பாடலில் வரும் 'தேவதாசுபார்வதிய ஹார்ட்-ல வை... தூக்கிப் போட்டு போனவள தாட்ல வை..." என இடம்பெறும் வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்பாடலை உதித் நாராயணன் உள்ளிட்ட சிலர் பாட விஜய் முத்துப்பாண்டி வரிகள் எழுதியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)