ரஜினிக்கு அடுத்து விஜய்... வைரலாகும் விஜய் சேதுபதியின் அடுத்த மூவ்...

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதனைதொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

vijay sethupathi

அண்மையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். இந்த நிறுவனம் ஏற்கனவே விஜய்யை வைத்து மூன்று படங்கள் தயாரித்துள்ளது.

இந்த படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். மீதமுள்ள நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது.

alt="sixer ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="bc99ff8c-3c5b-44c4-a98e-935106f53fc6" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x150%20sixer%20ad_9.jpg" />

#தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் 2019 தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் ஏப்ரல் 2020ல், ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படமாக இந்தப் படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது.

இந்த படத்தில் யார் வில்லனாக நடிக்க போகிறார்கள் என்று சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. முதலில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவராதபோது அங்கமாலி டைரீஸ் படத்தில் ஹீரோவாக நடித்த ஆண்டனி வர்கீஸ்தான் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க படக்குழு பேசி வருவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதன் அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக இரு தரப்பு ரசிகர்களும் ‘ஐயம் வெயிட்டிங்க்’ என்று காத்துகொண்டிருக்கின்றனர்.

thalapathy 64 vijaysethupathi
இதையும் படியுங்கள்
Subscribe