/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay-sethupathi_29.jpg)
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சைக்கோ'. இப்படத்தைத் தொடர்ந்து, அவர், 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடிக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 'பிசாசு 2' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கௌரவத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில படங்களில் விஜய் சேதுபதி, கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தாலும், இப்படத்தில் அவர் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படக்கூடியதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
'பிசாசு 2' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் திண்டுக்கல்லில் படமாக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அதற்காக அவர் விரைவில் திண்டுக்கல் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)