தமிழ் சினிமாவில் நாயகனாக ஆரம்பித்து இந்தி, தெலுங்கு சினிமாக்களில் வில்லனாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. தொடர்ச்சியாகத்தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். மெரி கிறிஸ்துமஸ், விடுதலை இரண்டாம் பாகம் ஆகியவை ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதாக அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு ‘டிரெயின்’(Train) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த விஜய் சேதுபதி, தன்னுடைய வித்தியாசமான இயக்கத்தால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் மிஷ்கின். இவர்கள் இணைந்து ஒரு படம் உருவாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.