Advertisment

'தேசிய விருதுக்கு தகுதியானவர் விஜய் சேதுபதி' - ஷங்கர் பாராட்டு

'Vijay Sethupathi deserves National Award' - Shankar Praise his acting in maamanithan

Advertisment

சீனு ராமசாமி, விஜய் சேதுபதி இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள 'மாமனிதன்' படம் இன்று (24.06.2022) உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் முறையாக இளையராஜாவும் - யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்தை 'ஒய்.எஸ்.ஆர் ஃபில்ம்ஸ்' நிறுவனம் சார்பாக யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். ரிலீஸ் தேதியில் பலமுறை மாற்றம் செய்யப்பட்டு தற்போது வெளியாகியிருக்கும் இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வரத்தொடங்கியுள்ளன, ரசிகர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் ஷங்கர் 'மாமனிதன்' படத்தைபார்த்து தனது கருத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், " மாமனிதன், ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைத்தது. இயக்குநர் சீனுராமசாமி தனது உழைப்பை போட்டு, இதை ஒரு யதார்த்தமான கிளாசிக் படமாக எடுத்துள்ளார். விஜய் சேதுபதியின் சிறப்பான நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது. மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்துடன் ஆத்மார்த்தமாக கலந்துள்ளது" என படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

director Shankar seenu ramasamy maamanithan actor vijay sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe