“அதைப் பொறுத்துத் தான் இங்க மதிப்பே...” - பாலிவுட் ரசிகர்களை விமர்சித்த விஜய் சேதுபதி

Vijay Sethupathi criticizes Bollywood fans

தென்னிந்திய மொழிகளைத்தாண்டி பாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.அந்த வகையில் தமிழில்'விடுதலை',தெலுங்கில் 'மைக்கேல்',இந்தியில் 'ஜவான்', 'மும்பைக்கார்', 'மெர்ரி கிறிஸ்துமஸ்' உள்ளிட்ட படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வருகின்றன.

இந்நிலையில், இந்தியில்ராஜ் மற்றும் டீகே புதிதாக எடுத்து வரும் ‘ஃபார்ஸி’ எனும் இணையத்தொடரில் நடித்து வருகிறார். இந்தத்தொடரில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஷாஹித் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூரின்ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரைபடக்குழுவெளியிட்டுள்ளது. இந்தத்தொடர் அடுத்த மாதம் 10 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தத்தொடரின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் ட்ரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய விஜய் சேதுபதி, "யாரவதுநான் இந்தி படம் நடிக்கிறேன் என்று கேட்டால்,ஷாஹித்துடன் நடிக்கிறேன் எனச் சொல்வேன். அப்போதுதான் மதிக்கிறார்கள். எனவே, நான் ஷாருக்குடன் வேலை செய்கிறேன். நான் கத்ரீனா கைஃப் உடன் வேலை செய்கிறேன் என்று சொல்ல வேண்டும். அதாவது நான் யாருடன் இணைந்துப் பணியாற்றுகிறேன் என்பதைப் பொறுத்துத்தான் இங்கு மதிப்பு" எனக்கூறினார்.

actor vijay sethupathi Bollywood
இதையும் படியுங்கள்
Subscribe