/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/680_3.jpg)
'பிசாசு', 'துப்பறிவாளன்', 'சைக்கோ' உள்ளிட்ட பல வித்தியாசமானவெற்றிப் படங்களைக்கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை இயக்குநர் மிஷ்கின் பிடித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பைமுடித்துள்ள படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் பிசாசு 2 படத்தின் தனது கதாபாத்திரத்திற்கானடப்பிங் பணியை நடிகர் விஜய் சேதுபதி பேசி முடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் ஒன்றையும் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Follow Us