/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/34_33.jpg)
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் லாபம். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், படக்குழு ரிலீசுக்கான பணிகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இந்தப் படத்திற்கான ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியது. இதனால், படம் ரிலீஸ் குறித்து குழப்பம் அடைந்த ரசிகர்கள், படம் தியேட்டரில் வெளியாகாதா என்று சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பினர்.
இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் விளக்கமளித்துள்ள விஜய் சேதுபதி, "லாபம் படம் நேரடி ஓடிடி ரிலீஸ் இல்லை. தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)