விவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுருதிஹாசன் நடிக்கின்ற படம் லாபம்.

vijay sethupathi

விவசாயிகளின் பொருளாதார சூழல் பற்றி பேசுகிறது இப்படம். இதன் ஷூட்டிங் சென்னையை சுற்றியுள்ள குன்றத்தூர் அருகே பெருவயல் என்கிற கிராமத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது இந்த படத்திற்காக விவாசயிகள் சங்க கட்டிடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விஜய்சேதுபதி படத்திற்காக பயன்படுத்தபோகும் விவசாய சங்க கட்டடத்தை செட்டாக அமைக்காமல் உண்மையான கட்டிடம் ஒன்றை கட்ட சொல்லி உள்ளார். ஷூட்டிங் நிறைவடைந்ததும் அந்த கட்டிடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுக்க சொல்லியுள்ளார் விஜய் சேதுபதி. இதனால் அந்த கிராம விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

இந்த லாபம் படத்தை விஜய்சேதுப் புரொடக்‌ஷ்ன்ஸ் நிறுவனமும் 7சிஎஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi
இதையும் படியுங்கள்
Subscribe