பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன்ஒரு வாரத்தைக் கடந்துள்ளது.இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, ஆண், பெண் என இரண்டாகப் பிரிக்கப்பட்ட வீடு எனப் பல புதுமைகளுடன் தொடங்கப்பட்டது. இந்த முறை, ஹோஸ்டாக களமிறங்கிய விஜய் சேதுபதி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டி, அனைத்து தரப்பினரும் ரசிக்கும்வகையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வார முடிவில் எந்த தயக்கமும் இல்லாமல் பிரச்சனைகளை நேரடியாக அணுகும், போட்டியாளர்களின் தவறுகளை அவர்களிடமே கேட்டு வருகிறார்.
வீட்டில் நடந்த சம்பவங்களின் பின்னணிகளை அலசுவதுடன், அதற்கான தீர்வுகளையும் சொல்கிறார். வீட்டில் ஆண்களிடம் ஒற்றுமை நிலவினாலும், பெண்கள் அணியில் ஒற்றுமை இல்லாததைச் சுட்டிக்காட்டி, அதைச் சரிசெய்து கொள்ளவும் பரிந்துரைத்தார். வார முடிவில் எலிமினேசன் ரவுண்டில், இந்த முறை ரவீந்தர் வெளியேறினார்.