Advertisment

விஜய் சேதுபதி விவகாரம் - குற்றத்தை ஒப்புக்கொண்ட அர்ஜுன் சம்பத்

vijay sethupathi arjun sampath issue

கடந்த 2021ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவர் குறித்து விஜய் சேதுபதி பேசியதாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், மிரட்டல் விடுத்திருந்தார். அதாவது, “விஜய் சேதுபதியை, உதைப்பவருக்கு ரொக்கப் பரிசாக 1,001 ரூபாய் வழங்கப்படும்” என அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Advertisment

இது தொடர்பாக அர்ஜூன் சம்பத் மீது பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் ஆய்வாளர் சாந்தி புகார் அளித்தார். அதன் பேரில் அர்ஜூன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சந்தோஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான அர்ஜுன் சம்பத், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

Advertisment

இதையடுத்து அவருக்கு தண்டனையாக ரூ.4000 அபராதம் விதிக்கப்பட்டது. பின்பு அந்த தொகையை நீதிமன்றத்தில் செலுத்தினார் அர்ஜுன் சம்பத்.

Arjun Sampath actor vijay sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe