Vijay Sethupathi and Mammootty to team up for director Manikandan's next

Advertisment

'காக்காமுட்டை' படம் மூலம் இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமான மணிகண்டன், குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை என யதார்த்தமானபடங்களை இயக்கி பிரபலமானார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த'கடைசி விவசாயி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதோடுதிரை விமர்சகர்களாலும் பெரிதாகப்பாராட்டப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து மணிகண்டன் ஒரு படம் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில்விஜய் சேதுபதி மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இருவரையும் வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் எனத்தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்தான அறிவிப்பு வெளியாகும் எனவும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் ஆரம்பமாகும் எனவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

விஜய் சேதுபதி தற்போது தமிழில் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை' படத்தில் நடிக்கிறார். இந்தியில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’, 'ஜவான்', 'மும்பைகார்' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். மம்மூட்டி தற்போது 'காதல்' என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இருவரும் தாங்கள் ஒப்பந்தமானபடங்களை முடித்துவிட்டு மணிகண்டன் படத்தில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.