கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் இந்தியில் வெளியான'அந்தாதூன்' மாபெரும் வெற்றிபெற்றது. மேலும், இப்படம் 3 தேசிய விருதுகளையும் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது. கடந்த ஆண்டே இதுகுறித்தஅதிகாரபூர்வஅறிவிப்பு வெளியான நிலையில், கரோனாபரவலால் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், கரோனாபரவல் தற்போது குறைந்துள்ளதால் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி படத்தின்முதற்கட்ட படப்பிடிப்பைவரும் 15ஆம் தேதி புனேவில் தொடங்கவுள்ளது. அங்கு விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா இடையேயான காதல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாககூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பிற்குதயாராகும் விஜய் சேதுபதி, அடுத்த வார தொடக்கத்தில் மும்பை செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட்டில் ‘மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘மும்பைகர்’ படத்திலும், ‘காந்தி டாக்கீஸ்’ என்ற மவுன படத்திலும்நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.