/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/274_6.jpg)
கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் இந்தியில் வெளியான'அந்தாதூன்' மாபெரும் வெற்றிபெற்றது. மேலும், இப்படம் 3 தேசிய விருதுகளையும் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கவுள்ளார்.இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது. கடந்த ஆண்டே இதுகுறித்தஅதிகாரபூர்வஅறிவிப்பு வெளியான நிலையில், அதன்பிறகு இப்படம் குறித்தஎந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாகநடிக்கும் கத்ரீனா கைஃப் படம் குறித்தபுதிய தகவலைவெளியிட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் விக்கிகொளஷாலை திருமணம் செய்து கொண்டகத்ரீனா கைஃப் தற்போது‘மெர்ரி கிறிஸ்துமஸ்’படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம்‘மெர்ரி கிறிஸ்துமஸ்’படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருவது உறுதியாகியுள்ளது. மேலும் இப்படத்தை விரைந்து முடித்து வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகசினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)