சிம்பு நடிப்பில் வெளியான வாலு, விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்து, விஜயா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து படம் இயக்குகிறார்.

vj sethupathi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கன்னா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கின்றனர். காமெடியனாக சூரி நடிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 7ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு வெளியிடப்பட்டது. முன்பு இப்படத்தின் பெயர் சங்கத் தமிழன் என்று தகவல் வெளியானதை போலவே போஸ்டரில் சங்கத் தமிழன் என்று பெயர் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் மேலும் இப்படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்ன என்றால் முறுக்கு மீசையில் ஒரு விஜய் சேதுபதி, மற்றொரு கெட்டப்பில் இன்னுமொரு விஜய் சேதுபதி என இரு விஜய் சேதுபதிகளாம். விஜய் சேதுபதி இரு கதாபாத்திரங்களில் நடிப்பது இதுவே முதன் முறையாகும்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதரபாத்தில் நடைபெற்று முடிவடைந்ததாகவும். இதில் விஜய் சேதுபதி முறுக்கு மீசை கெட்டப்பில் நடிக்க ராஷி கன்னா ஜோடியாக நடித்துள்ளார். அடுத்த கட்ட படப்பிடிப்பு மதுரை, தேனி போன்ற பகுதிகளில் நடைபெற இருப்பதாகவும். அதில் வேறு ஒரு கெட்டப்பில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிப்பார் என சொல்லப்படுகிறது.